×

காஞ்சிபுரத்தில் விவசாய நிலங்களில் பரவி கிடக்கும் கல்குவாரி பாறைத்துகள்கள்: வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை!

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் கல்குவாரியால் விளைநிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வயல்வெளி முழுவதும் மண் துகள்களின் கழிவுகள் நிறைந்து காணப்படும் இந்த காட்சியை காணும் விவசாயிகள், தினம் தினம் வேதனையை அனுபவித்து வருகின்றனர். காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது மாகரல் கிராமம். இப்பகுதியில் இயங்கிவரும் 5 கல்குவாரி மற்றும் ஆலைகளிலிருந்து வெளியேறும் பாறைத்துகள்கள் காற்றில் கலந்து,  விவசாய நிலங்கள் முழுவதும் பரவி வருவதால் தற்போது 300 ஏக்கர் பரப்பிலான பயிர்கள் அனைத்தும் காய்ந்து, கருகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், கல்குவாரியிலிருந்து வெளியேறும் கழிவுகள் பாசனத்திற்கு செல்லும் நீரில் கலப்பதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 2500 பரப்பளவு கொண்ட எரியும், தற்போது கல்குவாரிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடும்போது மண் துகள்கள் விழுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் விவசாயிகளின் நலன் கருதியும், மற்றும் ஏரியின் பாதுகாப்பு கருதியும் கல்குவாரிக்கு அனுமதி அளிக்கவேண்டாமென பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர்,  மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். பிரச்சனை குறித்து காஞ்சிபுரம் சாராட்சியர் சரவணனிடம் கேட்டபோது கல்குவாரிகளுக்கு வருவாய்த்துறை சார்பாக அனுமதி எதுவும் வழங்கவில்லை என கூறினார். ஆனாலும் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக புவியியல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்களும் பதிலளிக்க மறுத்து விட்டனர். 

Tags : Kalukwari ,lands ,Kanchipuram ,loss ,agonize farmers , Kanchipuram, agricultural land, kalukwari, rocks, farmers, agony
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...