×

சபரிமலையில் இன்று நடைதிறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. 18ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். கொரோனா வைரஸ் பீதியைத் தொடர்ந்து பக்தர்கள் வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளது.

சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது என்று ஏற்கனவே கேரள அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் வழங்கப்பட மாட்டாது. அப்பம், அரவணை கவுண்டர்கள் செயல்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags : Sabarimala , Sabarimalai, walking
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு