வங்கதேச படகு ஹூக்ளி ஆற்றில் மூழ்கியது

கொல்கத்தா: வங்கதேசத்தை சேர்ந்த சரக்கு படகு ஒன்று ஹூக்ளி ஆற்றில் மூழ்கியது.மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றில் தவறுதலாக வங்கதேசத்தை சேர்ந்த மிகப்பெரிய சரக்கு படகு ஒன்று வந்தது. இந்த படகு கொல்கத்தாவில் எதிர்பாராதவிதமாக கப்பல் மீது மோதியது. பின்னர் வந்த படகு, அக்ரா அருகே ஹூக்ளி ஆற்றில் மூழ்கியது. சரக்கு படகு மோதியதால் கப்பலும் சேதமடைந்தது.

இது குறித்து கொல்கத்தா துறைமுக செய்தி தொடர்பாளர் சஞ்சய் முகர்ஜி கூறுகையில், “சரக்கு படகு தவறான வழியில் வந்துள்ளது. சரக்கு அனுப்பும் கப்பலில் மோதியதால் கப்பலும் சேதமடைந்தது,” என்றார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>