×

போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்க மகாமக குள இரும்பு கேட்டுகளில் சிவ வாக்கியங்கள் எழுதும் பணி

கும்பகோணம்: போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்க கும்பகோணம் மகாமக குளத்தின் இரும்பு கேட்டுகளில் சிவ வாக்கியங்கள் எழுதும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கும்பகோணம் மகாமக குளம் உலக புகழ் பெற்றதாகும். 12 ஆண்டுக்கு ஒருமுறை வரும் மாசி மகாமகம், ஆண்டுதோறும் வரும் மாசிமக நாளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவர். மகாமக குளத்தை சுற்றி 16 சோடசலிங்கங்கள் மற்றும் குளத்தின் உள்ள 21 தீர்த்த கிணறுகளும், குளத்தையும் சேர்த்து 22 தீர்த்த கிணறுகள் உள்ளன. மகாமக குளத்தில் தினம்தோறும் திரளான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். குளத்தின் பாதுகாப்பு கருதி குளத்தை சுற்றிலும் இரும்பு தடுப்புகளும், கேட்டுகளும் அமைக்கப்பட்டு அதை பராமரிக்கும் பணி காசிவிஸ்வநாதர் கோயில் நிர்வாகத்திடம் இருந்து வருகிறது. கடந்த மகாமகத்துக்கு முன் இரும்பு கேட்டுகளில் பல்வேறு விளம்பரங்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து பல லட்ச ரூபாய் செலவில் இரும்பு கேட்டுகளை சீரமைத்து அதன் மைய பகுதியில் வர்ணம் பூசி சிவ வாக்கியங்களை எழுதினர். நாளடைவில் எழுத்துக்கள் அழிந்தன. இதனால் மீண்டும் இரும்பு கேட்டுகளில் போஸ்டர்களை ஓட்டி வநதனர். இதுகுறித்து காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் கோயில் நிர்வாகம் சார்பில் மகாமக குளத்தை சுற்றிலுள்ள இரும்பு கேட்டுகளின் மைய பகுதியில் சிவ வாக்கியங்களை எழுதுவதற்கு உபயதாரர் மூலம் நிதியை பெற்றனர். இதைதொடர்ந்து கும்பகோணம் மொட்டைகோபுரம் வாசல் பகுதியை சேர்ந்த சிவனடியார் மோகன் (71) என்பவர் மகாமக குளத்தை சுற்றிலும் உள்ள இரும்பு கேட்டுகளில் உள்ள 340 மைய பகுதியில் பல்வேறு வர்ணங்களில் சிவ வாக்கியங்களை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Tags : Mahakamakkal ,pastors ,Kumbakonam , Kumbakonam
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...