×

ஒரே வாகனத்தில் பத்திரிக்கையாளர்களுடன் பயணம் செய்து வேளாண் திட்டங்களை நேரில் ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருள்ராஜ் தலைமையில் வேளாண்துறை திட்டம் செயலாக்கம் குறித்து வயலாய்வு பயணம் இன்று மேற்கொள்ளப்பட்டது . இந்தியாவிலேயே முதன்முதலாக வேளாண்மை துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திட்டம் செயலாக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் இன்று 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட சுற்றுப்பயணம், திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த திட்டங்களை பெறுவாரியான விவசாயிகளை சென்றடைய இந்த பயணம் மிகப் பயனுள்ளதாக இருந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். வேளாண் வணிகத்துறை மூலமாக புதிய தொழில் முனைவதற்கான திட்டத்தின் கீழ் திருக்கழுக்குன்றத்தில் உள்ள எண்ணெய் பிரியும் இயந்திர அங்காடியும், அதனை தொடர்ந்து வேர்க்கடலை மதிப்பு கூட்டு தொழில் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து பட்டிக்காடு பகுதியில் கோடையில் பயிர் சாகுபடி செய்யும் வேர்க்கடலை வயலும், இயற்கை முறையில் பயிர் செய்யப்படும் மைசூர் மல்லி ஆகிய வயலையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

தொடர்ந்து நெல் அறுவடை இயந்திரம் பயன்பாடுகள் மற்றும் சூழல் கலப்பை குறித்தும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று பயனாளிகளை சந்தித்து குறைகளையும் கேட்டறிந்தார். இந்த பயணத்தில் அரசு திட்டங்கள் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அரசு திட்டங்களை எடுத்துக் கூறும் வகையில் பத்திரிகையாளர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்பதால் பத்திரிக்கையாளர்களுடன் ஒரே வாகனத்தில் பயணம் செய்து பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடினார்.

The post ஒரே வாகனத்தில் பத்திரிக்கையாளர்களுடன் பயணம் செய்து வேளாண் திட்டங்களை நேரில் ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu District ,Governor ,Arulraj ,India ,Government of Tamil Nadu ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டம் பரனூர்...