×

அஞ்சுகிராமம்-வழுக்கம்பாறை இடையே மரணக்குழிகளான தார் சாலை

அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் - வழுக்கம்பாறை தேசிய நெடுஞ்சாலை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த வழித்தடத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த வழித்தடம் வழியாக ஆன்மீக தலங்களான திருச்செந்தூர், உவரி, குலசேகரப்பட்டினம், ஆற்றங்கரை பள்ளிவாசல் போன்ற புண்ணிய தலங்களுக்கு செல்பவர்களும், தூத்துக்குடி விமான நிலையம் செல்வதற்கும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு தேவையான உபகரணங்களை இந்த சாலை வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த சாலை தற்போது நடந்துகூட செல்ல முடியாத அளவில் மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக ஜல்லி கற்கள் பெயர்ந்து மிக மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக மயிலாடி, புதூர் பகுதிகளில் மரண குழிகளாக மாறி உள்ளன. இந்த பகுதியில் வாகனங்களில் செல்லும் பொது மக்கள் உடல்வலி ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். தினமும் இருச்சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது மிகவும் சிரமப்பட்டு வாகனங்களை இயக்குகின்றனர். இந்தச் சாலையை கடக்கும் போது பல நேரங்களில் வாகனங்களில் பழுது ஏற்படுகிறது.

சாலையை சீரமைக்க பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த சாலையை உடனடியாக பொதுமக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Dhar ,Anjugram-Balugampara , Anjugram-Balugamparapura, Dhar Road
× RELATED ஒரு வழிப்பாதையில் வந்த 25 பஸ்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி