×

சாத்தான்குளம் கொலை வழக்கு 3 மாதத்தில் முடிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை, சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர்.

இந்த வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக சிபிஐ மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2020ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, ஐகோர்ட் மதுரைகிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘போலீசார் தாக்கியதால் எனது கணவர், மகன் உயிரிழந்தனர்.

கொலை வழக்கு தாமதமாக பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டோர் தற்போது சிறையில் உள்ளனர். ஆனால், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்குமாறு உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, மதுரை நீதிமன்றத்தில் நடக்கும் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணையை, 3 மாதத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.

The post சாத்தான்குளம் கொலை வழக்கு 3 மாதத்தில் முடிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Satankulam ,ICourt ,Madurai ,High Court ,Salesman Jayaraj ,Bennix ,Sathankulam, Thoothukudi district ,Sathankulam ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளம் தேவாலயத்தில் சுற்றுச்சூழல் ஞாயிறு கொண்டாட்டம்