×

இத்தாலியில் காத்திருக்கும் இந்தியர்களை மீட்க பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: இத்தாலி விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்தியர்களை பத்திரமாக அழைத்துவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதுகுறித்து மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இத்தாலியில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள் கொரோனா வைரஸ் தொடர்பான சான்றிதழ் இல்லாத காரணத்தால் விமான நிலையத்திலேயே காத்திருப்பதாக தகவல் வெளியானதாக கூறியுள்ளார். எனவே இதுகுறித்து தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.

இத்தாலியில் தவிக்கும் இந்திய மாணவர்கள்:

இத்தாலியில் கொரோனா குறித்த தகுதி சான்றிதழ் இல்லாமல் 55 தமிழக மாணவர்கள் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலக அளவில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 295 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து158 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 754 லிருந்து 80 ஆயிரத்து 778 ஆக உள்ளது. இதற்கிடையே, இத்தாலியில் உள்ள மிலன் மல்பென்சா விமான நிலையத்தில் தமிழக மாணவர்கள் 55 பேர் தவித்து வருகின்றனர். கொரோனா குறித்த தகுதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால், இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும், தங்களை மீட்கும்படியும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு அங்குள்ள மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Prannoy Vijayan ,Indians ,Italy ,Kerala , Prannoy Vijayan, Chief Minister of Italy, Indian Prime Minister Modi
× RELATED கம்போடியாவில் இருந்து 60 இந்தியர்கள் மீட்பு