×

பெங்களூரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி: மாநிலம் முழுவதும் தொடக்கப்பள்ளிகளை மூட அமைச்சர் சுதாகர் உத்தரவு

பெங்களூரு: பெங்களூரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு பரிசோதனைகள் செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.   குறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் அமெரிக்காவிலிருந்து திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில மருத்துவ கல்வி அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். அந்த நபரும் அவரது குடும்பத்தினரும் பெங்களூரில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூடில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக நாளை முதல் மாநிலத்தில் அனைத்து தொடக்க பள்ளிகளையும் மூட அமைச்சர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கர்நாடக மாநிலத்தில் பெண் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அங்கன்வாடிகளுக்கு 7 நாள் விடுமுறை அறிவித்துள்ளது.


Tags : Sudhakar ,Coroner ,Bengaluru ,primary schools ,closure , Bangalore, Corona Virus, Elementary School, Minister Sudhakar
× RELATED பணம் பறிமுதல்: ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் உதவி கேட்ட பாஜக வேட்பாளர்