×

ஒரே வருடத்தில் இரண்டு பிறந்த நாள் கொண்டாடிய மன்னர்!

நன்றி குங்குமம் முத்தாரம்

1948 ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ஜார்ஜ் நவம்பர் மாதத்தில் பிறந்தவர் என்பதால், குளிர் காரணமாக தனது பிறந்தநாளை ஜூன் மாதம் கொண்டாடினார். பின்னாட்களில் அரச குடும்பத்தினர் இரண்டு பிறந்தநாள் விழாக்களை கொண்டாடவும் இப்பழக்கமே காரணமானது.
1958 -1962 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கிந்திய தீவுகள் என்ற பெயரில் நாடு ஒன்று செயல்பட்டு வந்தது. இதன் தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயின். கயா, பீகார் மாநிலத்தின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள பழம் பெரும் நகரம். கங்கை நதியின் உபநதியான பால்கு நதியின் கரையில் அமைந்துள்ளது. மகதப்  பேரரசின் தலைநகரமாக விளங்கியது கயா புத்தர் ஞானம் பெற்ற இடமான புத்த கயா, கயாவிற்கு தெற்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே உள்ள பிரதஷிலா மலைக்கும் தெற்கே உள்ள புத்தகயாவிற்கும் இடையில் ஏறத்தாழ 45க்கும் மேற்பட்ட புனிதத் தலங்கள் உள்ளன. மகத பல்கலைக்கழகமும் கல்லூரிகள் பலவும் இங்குள்ளன. இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர் 24 வயதான குர்பிரித் சிங் சாந்து நார்வே நாட்டைச் சேர்ந்த ஸ்டெபக் எஃப்சி (Stabaek FC) அணிக்காக 2014 மே மாதம் விளையாடினார். இதன்மூலம் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள கால்பந்து அணிக்காக விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை சாந்துவுக்கு கிடைத்துள்ளது.ஸ்பெயின், கொசோவோ, போஸ்னியா, சான் மரினோ, ஹெர்ஸகோவினா ஆகிய நாடுகளுக்கு அதிகாரபூர்வ தேசிய கீதம் என எதுவும் கிடையாது.

உலகிலேயே மிக நீளமான, ஆழமான, மிக அதிக செலவு பிடித்த ரயில் சுரங்கப்பாதை சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டுள்ளது. 12 பில்லியன் டாலர்கள் செலவில் இது கட்டப்பட்டுள்ளது. ஆல்ப்ஸ் மலையில் 57 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இது, தரை மட்டத்திலிருந்து 2.3 கி.மீ. ஆழத்தில் அமைந்துள்ளது. ஏமனிலுள்ள ஒரு தீவு சகோட்ரா (SOCOTRA) ஆகும். இது இந்தியப் பெருங்கடலில் அரேபிய தீபகற்பத்துக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. இங்கு பூமியில் வேறு எங்கும் காண முடியாத அரிய தாவர வகைகள் உள்ளன. இங்கு மரங்களும் தாவரங்களும் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 2 கோடி ஆண்டுகள் பழமையான தாவரங்களையும் இங்கு காண லாம். டிராகனின் ரத்த மரம் என்ற குடை வடிவிலான அபூர்வ மரம் இங்குள்ளது. இந்தத் தீவு யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மடகாஸ்கர் தீவின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு காடுகளாகும். இங்கு உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத அரிய தாவரங்கள் உள்ளன. இங்கு காணப்படும் தென்னை, பேரீச்சை, விசிறிப்பனை போன்ற மர வகைகளில் 95 சதவீதத்தை பூமியில் வேறு எங்கும் காண இயலாது. பூமியில் காணப்படும் 900 வகை ஆர்க்கிட் (ORCHID) என்னும் பகட்டு வண்ண மலர் வகைகளில் 90 சதவீதம் இந்தத் தீவிற்கே உரியது. ஆக்டோபஸ் வடிவத்தில் கிளைகள் விரிந்து காணப்படும் விநோத மரங்களும் இங்குள்ளன.

பாக்ஸ்க்ளவ் (FOXGLOVE) தாவரங்கள் ஐரோப்பா, மத்திய தரைக்கடல் சார்ந்த பகுதிகள் மற்றும் கேனரி தீவுகளைத் தாயகமாகக் கொண்டவையாகும். தண்டின் கீழ்ப்பகுதியில் முட்டை அல்லது நீள்வட்ட வடிவ இலைகள் தோன்றுகின்றன. தண்டின் மேல்பகுதியில் தொங்கும் மணி வடிவ உட்புறத்தில் புள்ளிகளை உடைய கருஞ்சிவப்பு மஞ்சள் அல்லது வெண்ணிற மலர்கள் கொத்தாகத் தொப்பி போல இருக்கும். இது நரிகளின் காலுறை வடிவத்தில் இருப்பதால் இந்தப் பெயர். இது இதய இயக்கத்தைத் தூண்டும் டிஜிட்டாலிஸ் மருத்துவப் பொருளின் மூல ஆதாரத் தாவரமாக வளர்க்கப்படுகிறது. ஆனால், இதன்  இலை, பூக்கள், விதைகள், சாறு அனைத்தும் விஷத்தன்மை கொண்டவை. மனிதனைக் கொல்லக்கூடியவை.சீஷெல்ஸ் தீவு இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நாடு. இங்கு காணப்படும் cocdemer என்ற இரட்டை தென்னை மரத்தின் விதையே உலகின் மிகப்பெரிய விதையாகும். நச்சு ஐவி (POISON IVY) என்ற நச்சு கருவாலி வகை மரம், வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளில் காணப்படுகிறது. இத்தாவரம் உண்டாக்கும் எண்ணெய் தோலில் பட்டால் கடுமையான வீக்கத்தையும் கொப்புளங்களையும் ஏற்படுத்தும்.

நச்சு ஐவியின் மீது பட்ட ஆடைகளை பல ஆண்டுகள் கழித்து அணிந்தாலும் எதிர்வினை ஏற்படக்கூடும். முதலாம் உலகப்போரின் போது 80 லட்சம் வீரர்கள் போர்க் கைதிகளாயினர். இவர்கள் எதிரி களிடம் சரணடைந்தவர்கள் அல்லது பிடிபட்டவர்கள். இவர்கள் கடும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ராவில் துளசி  பணப்பயிராக வெற்றிகரமாக பயிரிடப்படுகிறது. இத்துளசியில் ராமா, சியாமா என இரு வகைகள் இருந்தாலும் பெரும்பாலும் மக்களால் பயிரிடப்படுவது  ராமா வகை துளசியாகும். மேற்கு இந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வீரர் ஆன்டி காண்டீம் (Andy Ganteaume (1921-2016) தனது அணிக்காக 1948ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் எடுத்த சராசரி ரன்கள் 112. இது ஆஸ்திரேலிய வீரர் சர் டான் பிராட் மனின் சராசரியான 99.94-ஐ விட அதிகம். ஆனால் மேற் கிந்திய வீரர் விளையாடியது ஒரே ஒரு டெஸ்ட் பந்தயம்தான்.


Tags : King ,birthdays , King celebrating two birthdays in one year
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்