×

கோடைக்கு முன்பே சுட்டெரிக்குது வெயில்... கொரோனா நம்மகிட்ட வருதோ இல்லியோ... கோடைகால நோய்கள் அணிவகுக்க போகுது...

‘நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்கிறது வள்ளுவம். நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இம்மூன்றையும் முறையாக ஆராய்ந்து சிகிச்சை பெற்றால்,அது எப்போதும் நம்மை நாடாது என்பதே இக்குறளின் தனித்துவம். இன்றைய இயந்திர வாழ்க்கையில் இதை உணர்ந்து, நாம் பயணிக்க வேண்டியது காலத்தின் அவசியம்.

இயற்கை என்பது இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் அருட்கொடை. அதன் இயல்பை மீறிய செயல்களில் நாம் ஈடுபடும்போதோ அல்லது அளவுக்கதிகமாக அதற்கு சேதத்தை விளைவிக்கும் போதோ,பாதிக்கப்படுவது இயற்கை மட்டுமா? என்றால் நிச்சயமாக இல்லை. அதன் தாக்கத்தால் மனித குலமே பெருமளவில் பாதிக்கும் என்பது இயல்பான உண்மை. இன்று மாசுப்பிரச்சினைகள் நாடு முழுவதும் பெரும் சவலாக உள்ளது. இதற்கு மரங்களை அழித்ததும், வாகனப் பெருக்கம் அதிகரித்ததும் முக்கிய காரணம் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

இது ஒரு புறமிருக்க கோடை துவங்கும் முன்பே, தற்போது வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தென்கோளத்தில் இருக்கும் சூரியன் மார்ச் 21ம்தேதி, பூமத்திய ரேகைக்கு உச்சியில் பிரகாசிக்கும். அன்றைய நாள் சமபகல், சமஇரவாக இருக்கும். அதன் பிறகு சூரியன் வடகோளத்தில் நுழையும். அப்போதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். இந்த வகையில் சூரியன் வடகோளத்தில் நுழைந்திருக்கும் 60 நாட்கள், அதாவது ஏப்ரல், மே மாதங்கள் தமிழகத்தில் கோடை காலமாகும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பிப்ரவரி மாதத்திலேயே கோடை காலம் துவங்கி விடுகிறது. இந்த மாதத்தில் 95 டிகிரியை தாண்டி கொளுத்தும் வெயிலின் அளவு, படிப்படியாக உயர்ந்து ஏப்ரல் மாதத்தில் உச்சக்கட்டமாக 100 டிகிரியை எட்டும். ஆனால் தற்போது மார்ச் மாதத்திலேயே 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் வாட்டி வதைத்து, அனைத்து தரப்பினரையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தகோடைகாலத்தில்தான் பல்வேறு நோய்கள் நம்மை பாடாய் படுத்தி எடுக்கும். ஒருபக்கம் உலகையே மிரட்டிக்கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ் என்ற ஆட்கொல்லி நோய். சீனாவில் தொடங்கி கொரியா, சிங்கப்பூர் என பரவி இப்போது இந்தியாவுக்குள்ளும் நுழைந்துவிட்டது. தமிழகத்தில் இல்லை என்று சொன்னாலும் அலர்ட் செய்துள்ளார்கள். இது ஒருபக்கம் என்றால் வழக்கமான கோடை கால நோய் பாதிப்புகள் நம்மை வாட்டி வதைக்கப்போகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது தட்பவெட்பநிலை மாற்றம்.

இந்த தட்பவெட்ப நிலை மாற்றத்தால் கோடை காலத்தில் பரவும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது அம்மை நோய். சின்னம்மை,தட்டம்மை,பெரியம்மை, மணல்வாரி அம்மை போன்ற அம்மை நோய்களின் பட்டியல் மிகவும் நீளமானது. இதேபோல் மஞ்சள் காமாலை, ரத்த அழுத்தம்,வேனல்கட்டிகள், இயற்கை என்பது இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் அருட்கொடை. அதன் இயல்பை மீறிய செயல்களில் நாம் ஈடுபடும்போதோ அல்லது அளவுக்கதிகமாக அதற்கு சேதத்தை விளைவிக்கும் போதோ,பாதிக்கப்படுவது இயற்கை மட்டுமா? என்றால் நிச்சயமாக இல்லை. அதன் தாக்கத்தால் மனித குலமே பெருமளவில் பாதிக்கும் என்பது இயல்பான உண்மை. இன்று மாசுப்பிரச்சினைகள் நாடு முழுவதும் பெரும் சவலாக உள்ளது. இதற்கு மரங்களை அழித்ததும், வாகனப் பெருக்கம் அதிகரித்ததும் முக்கிய காரணம் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

இது ஒரு புறமிருக்க கோடை துவங்கும் முன்பே, தற்போது வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தென்கோளத்தில் இருக்கும் சூரியன் மார்ச் 21ம்தேதி, பூமத்திய ரேகைக்கு உச்சியில் பிரகாசிக்கும். அன்றைய நாள் சமபகல், சமஇரவாக இருக்கும். அதன் பிறகு சூரியன் வடகோளத்தில் நுழையும். அப்போதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். இந்த வகையில் சூரியன் வடகோளத்தில் நுழைந்திருக்கும் 60 நாட்கள், அதாவது ஏப்ரல், மே மாதங்கள் தமிழகத்தில் கோடை காலமாகும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பிப்ரவரி மாதத்திலேயே கோடை காலம் துவங்கி விடுகிறது. இந்த மாதத்தில் 95 டிகிரியை தாண்டி கொளுத்தும் வெயிலின் அளவு, படிப்படியாக உயர்ந்து ஏப்ரல் மாதத்தில் உச்சக்கட்டமாக 100 டிகிரியை எட்டும். ஆனால் தற்போது மார்ச் மாதத்திலேயே 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் வாட்டி வதைத்து, அனைத்து தரப்பினரையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தகோடைகாலத்தில்தான் பல்வேறு நோய்கள் நம்மை பாடாய் படுத்தி எடுக்கும். ஒருபக்கம் உலகையே மிரட்டிக்கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ் என்ற ஆட்கொல்லி நோய். சீனாவில் தொடங்கி கொரியா, சிங்கப்பூர் என பரவி இப்போது இந்தியாவுக்குள்ளும் நுழைந்துவிட்டது. தமிழகத்தில் இல்லை என்று சொன்னாலும் அலர்ட் செய்துள்ளார்கள். இது ஒருபக்கம் என்றால் வழக்கமான கோடை கால நோய் பாதிப்புகள் நம்மை வாட்டி வதைக்கப்போகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது தட்பவெட்பநிலை மாற்றம்.

இந்த தட்பவெட்ப நிலை மாற்றத்தால் கோடை காலத்தில் பரவும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது அம்மை நோய். சின்னம்மை,தட்டம்மை,பெரியம்மை, மணல்வாரி அம்மை போன்ற அம்மை நோய்களின் பட்டியல் மிகவும் நீளமானது. இதேபோல் மஞ்சள் காமாலை, ரத்த அழுத்தம்,வேனல்கட்டிகள், வியர்க்குரு, எலிக்காய்ச்சல், காலரா, வாந்திபேதி, வயிற்றுப்போக்கு, தொண்டை வலி,காதுவலி, மூக்கடைப்பு, இருமல், சளி, உடல்சோர்வு என்று எண்ணற்ற நோய்கள் மனிதர்களை தாக்க அணி வகுத்து நிற்கிறது. இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக மருத்துவர்களை நாடியே ஆக வேண்டும். ஆனாலும் நமக்கு நாமே சில வரைமுறைகளை வகுத்துக்கொண்டு கோடையை எதிர்கொண்டால், நிச்சயம் நோய்கள் நமக்கு எதிரியாகி விடும் என்கின்றனர் இயற்கை மீது ஆர்வம் கொண்ட மருத்துவர்கள்.

தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நொறுக்கு தீனிகளை தவிர்த்து  பழங்களை சாப்பிட வேண்டும். ஐஸ்கிரீம்,குளிர்பானங்களை தவிர்த்து பழச்சாறு பருக வேண்டும். பொரித்த உணவுகளை ஒதுக்க வேண்டும். வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். மூன்று வேளையும் வயிறு முட்ட உண்பதை மறக்க வேண்டும். காரம் நிறைந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். இதை உறுதியாக கடை பிடித்தால் நோய்களை கட்டுப்படுத்தலாம்.
முக்கியமாக நம் உடலின்  தட்பவெட்ப நிலை அதிக  மாறுதலுக்கு உள்ளாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதாவது  உடலில் எப்போதும்  போதுமான நீர்சத்து இருக்க வேண்டும். தாகம் தணிக்க நாம் அருந்தும் நீர் சுகாதாரமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால்  விதம் விதமான  நோய்களுக்கு  நாமே வழிவகுத்து  கொடுத்து விட்ட நிலையே உருவாகும் என்பது அவர்களின் உள்ளக்குமுறல்.

Tags : Sutterikku Vayu ,Us ,Corona Comes , Corona
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!