×

க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை: ஸ்டாலின் பேட்டி

சென்னை: மருத்துவர்களின் முயற்சிகள் பலனளிக்காத நிலையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் அவரை நேற்று இரவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

இதனைதொடர்ந்து வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக பொதுச்செயலாளர் பேராசியர் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் மற்றும் உதவிகளை செய்து வருகின்றனர். அவரது வயது முதிர்வு காரணமாக மருத்துவர்கள் வழங்கக்கூடிய சிகிச்சை பலனளிக்க முடியாத நிலையில் இருந்துகொண்டு உள்ளது. இருந்தாலும் பேராசியர் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகிறார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


Tags : Stalin , treatment ,KA: , Stalin
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...