×

எம்டிசியில் பழைய பஸ்களை கழிவு செய்ய ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க நிர்வாகம் திட்டம்: தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு

சென்னை: போக்குவரத்து துறையில் நிலவும் காலிப்பணியிடங்கள் காரணமாக, வெளியாட்களைக்கொண்டு பயன்படுத்த முடியாத பஸ்களை கழிவு செய்ய எம்டிசி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் 30க்கும் மேற்பட்ட பணிமனைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 760க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3,600 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதை 30 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். இவற்றில் பெரும்பாலானவை பழையதாகிவிட்டது. அவற்றை ஓரங்கட்டிவிட்டு புதிய பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறுள்ள பஸ்கள் முன்பு போக்குவரத்துத்துறையில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் கழிவு செய்வார்கள். பிறகு அவை ஏலம் விடப்படும். இந்நிலையில் தற்போது பழைய பஸ்களை கழிவு செய்வதற்கு போதிய பணியாளர்கள் இல்லை.

இதன்காரணமாக வெளியாட்களைக் கொண்டு பயன்படுத்த முடியாத பஸ்களை கழிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் முன்னதாக எம்டிசி பேருந்து நிலையங்கள், பணிமனைகள் போன்றவற்றை பராமரிப்பதற்கான பணியில் ஊழியர்களே பயன்படுத்தப்பட்டு வந்தனர்.ஆனால் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தனியாரைக்கொண்டு பராமரிக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பஸ்களை கழிவு செய்யும் பணியிலும் வெளியாட்கள் பயன்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாநகர போக்குவரத்துக்கழக குரோம்பேட்டை மத்திய தொழிற்கூட்டத்தில் உள்ள கழிவுப் பொருள் பிரிவில் தற்சமயம் 421 பயன்படுத்த முடியாத பஸ்கள் கழிவு செய்யப்படாமல் உள்ளது.வெளியாட்களைக்கொண்டு கழிவு செய்வதற்கு போதிய பணியாளர்கள் இல்லாததே காரணம். பல்வேறு இடங்களில் போதிய பணியாளர்கள் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.



Tags : contract workers ,trade unions ,MTC , buses ,MTC,trade unions
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...