×

10 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க ஏற்பாடு: சென்னை மாநகர போலீஸ் தீவிரம்

சென்னை: குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர 10  நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் சென்னை சரக காவல் நிலையங்களில் தாக்கலான வழக்குளை  விரைந்து முடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை, தி.நகரை சேர்ந்த பெயின்டர் செந்தில் (36). இவர் கடந்த டிசம்பர் 29ம் தேதியன்று இரவு சுமார் 10 மணியளவில் தி.நகர், கிருஷ்ணசாமி தெருவில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து செந்திலின் மனைவி வளர்மதி பாண்டி பஜார் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து விசாரித்த போலீசார் சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் சுரேஷ் (எ) சொரி சுரேஷ் (32), திநகர். டாக்டர் தாமஸ் ரோடுபகுதியை சேர்ந்த அசோக் (எ) அசோக்குமார் (22) ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து, பாண்டிபஜார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சாட்சிகளை விசாரணை செய்து, தடயங்களை சேகரித்து தடயவியல் நிபுணர், மருத்துவர்களின் அறிக்கைகளை பெற்று 10 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதே போன்று சென்னை சரக காவல் நிலையங்களில்   தாக்கலான வழக்குளை  விரைந்து முடிக்க  உரிய  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்று தீவிர நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுரை வழங்கி உள்ளார்….

The post 10 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க ஏற்பாடு: சென்னை மாநகர போலீஸ் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Police ,CHENNAI ,Chennai Saraga Police Stations ,Dinakaran ,
× RELATED பந்தம் என்ற சேவையை சென்னை பெருநகர காவல்துறை தொடங்கியது!