×

முஸ்லிம் அமைப்பினர் கமலுடன் சந்திப்பு

சென்னை: பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கமல்ஹாசனை நேற்று சந்தித்து பேசினர். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சென்னையிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் மலபார் முஸ்லிம் சங்கம், ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு அஹ்லே சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு, மாநில உலமாக்கள் பேரவை உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் சந்தித்தனர்.

அப்போது, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மநீம வழக்கு தொடுத்தது, இந்த சட்டத்துக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவற்றுக்காக கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்தனர். அனைத்து மக்களும் பங்கெடுக்கும் போராட்டமாக இது மாறுவதற்கு ஆதரவு தரும்படி கமலிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர். போராட்டம் வலிமையாகவும் உறுதியாகவும் நடந்திட வேண்டும். அதில் வன்முறை புகுந்துவிடக் கூடாது என அவர்களிடம் கமல்ஹாசன் கூறினார்.

Tags : community ,Kamal Muslim ,organization , Muslim organization, meeting , Kamal
× RELATED தேர்தல் பணி போலீசார் தபால் ஓட்டு போட்டனர்