×

சிவகங்கை தொகுதி தேர்தல் வழக்கு ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் நேரில் ஆஜரானார்: கண்ணப்பன் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை

சென்னை: கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட 3,354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் நேரில் ஆஜராகி சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் அளித்தார்.

அப்போது, அவரிடம் ராஜகண்ணப்பன் தரப்பு வக்கீல், ப.சிதம்பரத்திடம் குறுக்கு விசாரணை செய்தார்.அப்போது, தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்பு கார்த்தி சிதம்பரம் தொகுதிக்குள் சென்றது குறித்தும், வாக்குக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது குறித்தும் ராஜகண்ணப்பன் தரப்பில் பல கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளை சிதம்பரம் மறுத்தார். இந்த வழக்கில் குறுக்கு விசாரணை முடிவடையாததால் விசாரணையை மார்ச் 9ம் தேதிக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தள்ளிவைத்தார்.

Tags : Chidambaram ,Sivaganga , Sivaganga constituency, Election case, Icord, P Chidambaram, Azhar, Kannappan lawyer
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ்...