×

டெல்லி கலவரத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கெஜ்ரிவால் அரசு நிவாரணம் அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு டெல்லியில் சமீபத்தில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் 46 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தது. இதை எதிர்த்து பாஜ முன்னாள் எம்எல்ஏ நந்த் கிஷோர் கார்க், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஹரிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல என கூறி தள்ளுபடி செய்தனர். இது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: இது அரசின் கொள்கை முடிவு என ெடல்லி அரசு தெரிவித்துள்ளது. எனவே இதில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

ஐகோர்ட் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 10 பேர் வெறுக்கத்தக்க வகையில் பேசிய பாஜ பிரமுகர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஸ் மிஸ்ரா, அபய் வர்மா மற்றும் அனுராக் தாகூர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதியவேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  இந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழங்கிய உத்தரவு:  டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்ட 10 பேர் தொடர்ந்த மனுக்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றம் மார்ச் 6ல் விசாரணை நடத்தவேண்டும். வன்முறை தொடர்பாக ஏப்ரலில் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்த மனுக்களையும் 6ம் தேதி ஒன்றாக விசாரணை நடத்தவேண்டும். இதன் மூலம் வன்முறைக்கு நல்ல முடிவை எட்ட முடியும். சமூக ஆர்வலர் ஹர்ஸ் மந்தர் மீதான வெறுப்பூட்டும் பேச்சு தொடர்பான விசாரணையை மட்டும் உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என்று கூறியுள்ளனர்

Tags : SC ,victims ,Delhi ,Case , Delhi riots, victims, relief, High Court
× RELATED பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த...