×

எரிமலை நாடு

நன்றி குங்குமம் முத்தாரம்

கர்நாடகாவின் ‘கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்’ நிறுவனம் மைசூர் மில்லினியம் என்ற பெயரில் தயாரித்த சந்தன சோப்பின் விலை ரூ.750. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சோப்புகளிலேயே விலை உயர்ந்த முதல் சோப் இதுதான்.சீனாவைத் தாயகமாகக் கொண்ட லிச்சிப் பழம், சாப்பாட்டிற்குப் பிறகு உண்ணப்படும் பழவகை களில் ஒன்று. பழச்சுளை புளிப்பும் துவர்ப்புமானது. காய்ந்தபிறகு அசத்தல் இனிப்பு கொண்டது. 1952 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், மணிப்பூரில் 4 முறை முதல்வராக இருந்தவருமான ரிஷாங் கெய்ஷிங் (நாகா இனம்), மணிப்பூருக்கு தனி மாநில அந்தஸ்து கோரி போராடியவர்.ஆங்கிலேய அறிவியலாளர் வில்லியம் கில்பர்ட் மின்சாரத்தைக் குறிக்க எலக்ட்ரிசிட்டி என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார். இச்சொல் கிரேக்கச்சொல்லான எலக்ட்ரான் என்ற என்பதிலிருந்து தோன்றியது.

புகையிலையைக் கட்டுப் படுத்தும் உலகளாவிய கூட்டமைப்பால் புகையிலைப் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியவில்லை. சிகரெட் கட்டுப் பாட்டிற்கு நிலவும் விதிமுறை களைப் போல் புகையிலைக்கு இல்லை. புகையிலையை எரிக்காமலேயே மூக்கு அல்லது வாய் வழியாகப் பயன்படுத்தும் புகையிலைத் தயாரிப்புகள் பல உள்ளன. MBE (Member of the Most Excellent Order of the British Empire) என்ற  விருதைப் பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் ஐதராபாத்தைச் சேர்ந்த எம்.வி. நரசிம்மராவ் ஆவார். இவர் வடக்கு அயர்லாந்து கிரிக்கெட் குழுவிற்கு பயிற்சியாளராக  சிறப்பாகப் பணியாற்றியதற்கு இந்த விருது வழங்கப்பட்டது.

சூரியன் உதிக்கும் நாடு எனப்படும் ஜப்பான், பசிபிக்  பெருங்கடலில் 6852 தீவுகள் கொண்ட எரிமலை மண்டல நாடாகும். இதன் முக்கிய நான்கு தீவுகள் ஹொக்கைடோ, ஹான்ஸு, ஷிகோகு மற்றும் கையுஷூ ஆகும். நாட்டின் 97 சதவிகித நிலப்பரப்பு இந்தத் தீவுகளே. ஆசியாவின் தென்கிழக்கு கடற்கரைக்கு அப்பால் அமைந் துள்ள பிலிப்பைன்ஸ், ஒரு தீவு கள் நாடு. இது கிட்டத்தட்ட  7641 தீவுகளையும் திட்டுகளையும் கொண்டுள்ளது. இவை லூசான், விசாயாஸ், மின்டானோ என வடக்கி லிருந்து தெற்காக மூன்று பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன. லூசான் தீவில் தலைநகர் மணிலா அமைந்துள்ளது. ஒரு தீவில் நிலவும் பலதரப்பட்ட வாழ்க்கைச்  சூழல்,  மற்றும் உயிரிகளைக் குறித்த படிப்பின் பெயர் ஐலேண்ட் ஈகோலஜி ஆகும். சிறு தீவுகள் islets எனவும், ஆறுகளில் காணப்படும் தீவுகள் aits அல்லது eyots எனவும் அழைக்கப்படுகின்றன.

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள கவர்கா அரண்மனை மிக ரம்மியமான இயற்கைச் சூழலில் கட்டப்பட்டுள்ளது. இது 1936 மற்றும் 1939 ஆம் ஆண்டுகளுக் கிடையே மகாராஜா தர்மராஜ் சிங்கால் கட்டப்பட்டது.  ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட மகாராஜா ஐரோப்பியர் போல தன் வாழ்க்கையை நவீனப் படுத்திக் கொள்ள இந்த அரண்மனையைக் கட்டினாராம். கர்நாடக மாநிலத்தின் தென் கிழக்குப் பகுதியில் கோலார் தங்கவயலில்தான் முன்பு இந்தியாவின் மொத்த தங்க உற்பத்தியில் 95 சதவிகிதத்திற்கும் அதிகமான தங்கம் கிடைத்தது. பின்னர் சுரங்கங்களின் வளம் குன்றின. கோலார் தங்கச் சுரங்கம் திப்பு சுல்தான் மற்றும் பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.

தொகுப்பு: க.ரவீந்திரன்

Tags : country , Sandalwood soap, made in the name of Mysore Millennium by Karnataka Soaps and Detergent Telephone Company
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...