×

டெல்லியில் வடகிழக்கு பகுதியில் வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46-ஆக உயர்வு

டெல்லி: டெல்லியில் வடகிழக்கு பகுதியில் வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும் மற்றும் ஆதரவாகவும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பகுதியான ஜாப்ராபத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் அருகில் உள்ள பகுதிகளுக்கும் தீயாக பரவியது. மவுஜ்பூர், கோகுல்புரி, பஜன்புரா, சந்த்பாக், பாபர்பூர், யமுனா விகார் போன்ற வடகிழக்கு பகுதிகள் வன்முறையாளர்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது.

இந்நிலையில டெல்லி வன்முறை தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 885 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வதந்திகள் பரவுவதை தடுக்க பொதுமக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், தென்கிழக்கு டெல்லியின் ஷாஹின் பாக் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஜாமியா மிலியா இஸ்லாமியாவுக்கு அருகிலுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே வன்முறையால் ஏற்கனவே 45 பேர் இருந்த நிலையில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. சுமார் 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Northeast Delhi , Violence rises , 46 ,Northeast Delhi
× RELATED வடகிழக்கு டெல்லி கலவர விவகாரம்:...