×

சாலை விபத்துகள் அதிகரிக்க விதிமீறல் தான் காரணம்: அருண், சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர்

சென்னை மாநகர காவல்துறை சார்பில் சாலை விதிகளை மீறியவர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையை பொறுத்தவரை சாலை விபத்துகள் குறைந்து வருகின்றன. போலீசின் இந்த அதிரடி நடவடிக்கைகள் தான் சாலை விபத்துகள் குறைய முக்கிய காரணம். விபத்துகள் அதிகரிக்க முக்கிய காரணம் விதிமீறல்கள் தான். அதே மாதிரி பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. பள்ளிகளில் பிரார்த்தனை கூட்டம் நடக்கும் போது அந்தந்த பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது போன்றவை தொடர்பாகவும், சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பது தொடர்பாகவும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மாணவர்களிடம் இதனால் நல்ல மாற்றங்கள் வருகின்றன. அதே போன்று, அடிக்கடி விபத்து நடைபெறும் பகுதிகளை விபத்து கரும்புள்ளி பகுதி என்று அழைக்கப்படுகிறது. அந்த மாதிரியான விபத்து அதிகரித்து வரும் கரும்புள்ளி பகுதிகளை கண்டறிந்து அங்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி செய்யப்படுகிறது. குறிப்பாக, எச்சரிக்கை பலகை, சிக்னல் அமைப்பது, ஸ்பீடு பிரேக்கர் அமைப்பது போன்ற வசதிகள் செய்யப்படுகிறது.  இதன் மூலம் விபத்து நடப்பது குறைகிறது.   விபத்து நடக்கிற வழிகளுக்கு வரவும், மருத்துவமனைக்கு விரைவாக போக போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. சென்னையில் பல இடங்களில் விபத்து கரும்புள்ளி பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பூந்தமல்லி, அம்பத்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட சந்திப்புகளில் விபத்து பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த விபத்து பகுதிகளை வரைபடத்தில் குறியீட்டு அதன்அடிப்படையில் அந்த இடத்தில் எத்தனை விபத்துகள் நடந்துள்ளது என்பது குறித்து அடையாளம் கண்டறியப்படுகிறது. மதுரவாயல் முதல் தாம்பரம் போகும் சாலைகளில் அடிக்கடி விபத்து நடப்பது எதற்காக என முதலில் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த இடத்தில் விளக்கு வசதி இல்லாதது தான் சாலை விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விளக்கு வசதி செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   

அதே போன்று குன்றத்தூர் பகுதிகளிலும் விளக்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது. பல துறைகள் இணைந்து தான் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இது போன்று விபத்து நடந்த இடத்தை கண்டறிந்து அந்த இடத்தில் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. சென்னை மாநகரத்தில் வாகனங்களில் அதிக ஒளி தரக்கூடிய விளக்குகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் சென்னை மாநகரில் வெளிச்சம் இல்லாத இடங்கள் குறைவு. இது போன்ற பிரச்னை எங்கு வரும் என்றால் மாநகர் வெளியில் உள்ள நெடுஞ்சாலைகளில் தான் வெளிச்சம் குறைவாக இருக்கும்.

அந்த இடங்களில் இது போன்று அதிக ஒளி தரக்கூடிய விளக்குகளை பயன்படுத்த வாய்ப்புள்ளது. அது போன்று விளக்குகளை பயன்படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காரணம் இது போன்ற விளக்குகளால் தான் சில நேரங்களில் விபத்து நடக்கிறது. எனவே, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். நெடுஞ்சாலைகளில்தான் வெளிச்சம் குறைவாக இருக்கும். அந்த இடங்களில் இது போன்று அதிக ஒளி தரக்கூடிய விளக்குகளை பயன்படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

Tags : Arun ,Chennai Municipal Transport Police ,road accidents , Road Accidents, Increase, Violation, Reason, Arun, Additional Commissioner of Chennai Municipal Traffic Police
× RELATED அருண் ஜெட்லி அரங்கம் தயார்: டெல்லி – ஐதராபாத் இன்று பலப்பரீட்சை