×

குப்பை கிடங்கில் இருந்து தட்சிணாமூர்த்தி கற்சிலை மீட்பு: சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை

சென்னை:  திருச்சி லால்குடி அருகே உள்ள கோமாங்குடி கிராமத்தில் தொன்மையான சிலை மறைத்து வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கூடுதல் டிஎஸ்பி ராஜாராம், டிஎஸ்பி கதிரவன், இன்ஸ்பெக்டர் தென்னரசன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கோமாங்குடி கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த கிராமத்தில் உள்ள குப்பை கிடங்கில் சோதனை நடத்திய போது, பல ஆண்டுகளுக்கு முன்பே மறைத்து வைக்கப்பட்டிருந்த தொன்மையான தட்சிணாமூர்த்தியின் கற்சிலை இருந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தட்சிணாமூர்த்தியின் கற்சிறையை மீட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கைப்பற்றப்பட்ட தட்சிணாமூர்த்தியின் சிலை எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது. யார் கொண்டு வந்து மறைத்து வைத்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையே கைப்பற்றப்பட்ட தட்சிணாமூர்த்தியின் கற்சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது என்று விசாரணை நடத்த இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கற்சிலை குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் கூடுதல் டிஎஸ்பி ராஜாராம் என்பவரை 9498154500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.Tags : Recovery ,garbage warehouse ,investigation ,Anti-Corruption Unit , garbage warehouse, Dakshinamoorthy ,Disaster Recovery:,Prevention Unit
× RELATED ஆண் சடலம் மீட்பு