×

ஆட்டோமொபைல்: மைலேஜ் வாரி வழங்கும்டாப் 10 கார்கள்

இந்திய வாடிக்கையாளர்கள் கார் வாங்கும்போது மைலேஜ் என்ற விஷயத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஏனெனில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உள்ளது. எனவே, நல்ல மைலேஜ் வழங்கும் கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டால், அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த விஷயத்தில் மாருதி சுஸுகி நிறுவனம்தான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கச்சிதமாக பூர்த்தி செய்கிறது. ஆம், மாருதி சுஸுகி நிறுவன கார்கள்தான், அதிக மைலேஜ் தருவதில் தலைசிறந்து விளங்குகின்றன. எனவேதான், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மாருதி மட்டுமின்றி, வேறு சில நிறுவனங்களும், நல்ல மைலேஜ் வழங்கக்கூடிய கார்களை உற்பத்தி செய்து வருகின்றன. இந்த வகையில், இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் நல்ல மைலேஜ் தரக்கூடிய கார்களின் பட்டியல் இதோ...

மாருதி சுஸுகி டிசையர் (பெட்ரோல், டீசல்)
மாருதி சுஸுகி டிசையர் கார் ஒரு லிட்டருக்கு 22 கி.மீ. முதல் 28 கி.மீ. வரை மைலேஜ் வழங்கக்கூடியது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது. செடான் ரக காரான மாருதி சுஸுகி டிசையர், ₹6 லட்சம் முதல் 9.53 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மாருதி சுஸுகி ஸ்விப்ட் (பெட்ரோல், டீசல்)
மாருதி சுஸுகி டிசையரை போலவே, ஸ்விப்ட்டும் நல்ல மைலேஜ் வழங்கக்கூடிய கார்தான். இந்த கார், ஒரு லிட்டருக்கு, 22 கி.மீ. முதல் 28 கி.மீ. வரை மைலேஜ் வழங்கக்கூடியது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது. இது, 5.25 லட்சம் முதல் 8.84 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

மாருதி சுஸுகி சியாஸ் (பெட்ரோல்)
மாருதி சுஸுகி சியாஸ் காரில், மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என இரு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இந்த கார் ஒரு லிட்டருக்கு 28.09 கி.மீ. மைலேஜ் வரை வழங்கக்கூடியது. இந்த கார், 8.31 லட்சம் முதல் 11.09 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்
படுகிறது.

மாருதி சுஸுகி பலேனோ (பெட்ரோல், டீசல்)
மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் மாருதி சுஸுகி பலேனோ கிடைக்கிறது. இந்த கார், ஒரு லிட்டருக்கு 27.39 கி.மீ. வரை மைலேஜ் வழங்கக்கூடியது. இந்த கார் 5.63 லட்சம் முதல் 8.96 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்
படுகிறது.

மாருதி சுஸுகி இக்னிஸ் (பெட்ரோல்)
மாருதி சுஸுகி இக்னிஸ் காரில் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மேனுவல், ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் ஒரு லிட்டருக்கு 20.89 கி.மீ. மைலேஜ் வழங்கக்கூடியது. இந்த கார், ₹4.83 லட்சம் முதல் 7.14 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா டிகோர் (பெட்ரோல்)
டாடா டியாகோ போல், டாடா டிகோர் காரிலும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், இதிலும் மேனுவல், ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார், ஒரு லிட்டருக்கு 20.3 கி.மீ. மைலேஜ் தரக்கூடியது. 5.75 லட்சம் முதல் ₹7.49 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா டியாகோ (பெட்ரோல்)
டாடா டியாகோ கார் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டும் கிடைக்கிறது. ஆனால் மேனுவல், ஆட்டோமெட்டிக் என 2 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இந்த கார் ஒரு லிட்டருக்கு 23.84 கி.மீ. மைலேஜ் வழங்கக்கூடியது. ₹4.6 லட்சம் முதல் ₹6.6 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (பெட்ரோல், டீசல்): ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் கிடைக்கிறது. அதேபோல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார், ஒரு லிட்டருக்கு 26.2 கி.மீ மைலேஜ் வரை வழங்கக்கூடியது. 5.04 லட்சம் முதல் 8.04 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹோண்டா அமேஸ் (பெட்ரோல், டீசல்)
ஹோண்டா அமேஸ் கார், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் கிடைக்கிறது. மேலும், மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என இரு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. ஹோண்டா அமேஸ் கார், ஒரு லிட்டருக்கு 27.4 கி.மீ. வரை மைலேஜ் வழங்கக்கூடியது. 6.09 லட்சம் முதல் 9.95 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

மாருதி சுஸுகி எர்டிகா (பெட்ரோல், டீசல்)
இந்திய மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி எர்டிகா உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என இரு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் மாருதி சுஸுகி எர்டிகா காரில் கிடைக்கின்றன. இது ஒரு லிட்டருக்கு 25.47 கிலோ மீட்டர்கள் வரை மைலேஜ் வழங்க கூடியது. ₹7.59 லட்சம் முதல் ₹11.2 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எர்டிகா விற்பனையாகிறது.

Tags : Automobile, mileage, top 10 cars
× RELATED இயர் பட்ஸ், ஹெட் போன்களின் அபரிவிதமான...