×

குடியுரிமை திருத்த சட்டம் சாமான்ய மக்களுக்கு எதிரானது: இயக்குனர்கள் அமீர், வெற்றிமாறன் பேட்டி

சென்னை: குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சாமான்ய மக்களுக்கு எதிரானது என இயக்குனர்கள் அமீர், வெற்றிமாறன் கூறினர்.தமிழ் திரைப்பட இயக்குனர்கள் அமீர், வெற்றி மாறன் சென்னையில் அளித்த பேட்டி:டெல்லி வன்முறை ஒரு குறிப்பிட்ட பிரிவை சார்ந்த குண்டர்களால்தான் ஏற்பட்டது. சிஏஏ சட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மை. ஏப்ரலில் என்ஆர்சி கணக்கெடுப்பு தொடங்கும்ேபாது பாதிப்பு தெரியும். குடியுரிமை திருத்த  சட்டம் நமக்கு எதிரான சட்டம் இல்லை என்று  நினைத்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால், ஒரு நிமிடத்தில் லட்சக்கணக்கானவர்கள் வாழ்க்கை முடிந்துபோய்விட்டது. அகதிகள் ஆக்கப்பட்டார்கள். 2002, 2014ல் இந்த அரசியலை பார்த்தோம். தற்போது 2020லும் இதை பார்க்கிறோம். தமிழகத்தில் இது வந்துவிடக்கூடாது என்று  எண்ணிக் கொண்டிருந்தபோது நேற்று டெல்லி நாளை சென்னை என்று சொல்லும்போது அச்சத்தை தருகிறது என்றார்.

இயக்குனர் வெற்றி மாறன் கூறுகையில், ‘‘சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி என்பது இன்றைய சூழலில் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல சாமானிய மக்களுக்கும் எதிரான சட்டம்.  தனி முகாமில் அடைக்கப்பட்டு இருக்கும் 19 லட்சம் பேரில்  முஸ்லிம்களை விட இந்துக்கள்தான் அதிகம். இதுபற்றி மவுனம் சாதித்தால் அது ஆபத்தாக இருக்கும். பல இடங்களில் தனி முகாம்களை பல கோடி செலவு செய்து கட்டுகிறார்கள். இந்திய மக்கள் எந்த பிரிவினைக்கும் ஆளாகக்கூடாது. இது  எனக்குள் நான் எடுக்கும் உறுதி. மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதுதான் பாசிசத்தின் நடைமுறை, அதுதான் இப்போது நடக்கிறது’’ என்றார்.



Tags : Amir ,Vijayamaran ,Directors Amir , Citizenship Amendment Act, Directors,Amir ,Vijayamaran
× RELATED ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது