×

பங்குச்சந்தையில் கொரோனா படுத்தும்பாடு கோடீஸ்வரர்களின் பணம் 32 லட்சம் கோடி போச்சு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் சரிவு ஏற்பட்டதுடன், பங்குச்சந்தைகள் அதளபாதாளத்துக்கு சென்று விட்டன. உலகமகா கோடீஸ்வரர்களின் 32 லட்சம் கோடி பணம் கையை விட்டு போய் விட்டது. கடந்த வாரம் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகளில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ெகாரோனா வைரஸ் காரணமாக பல தொழில்கள் முடங்கின; அதனால், பங்குச்சந்தைகளும் மதிப்பை இழந்து சரிந்தன. பல ஆயிரம்  புள்ளிகள் சரிந்து அதளபாதாளத்துக்கு சென்று விட்டன.  முதலீடு செய்திருந்த சாதாரண முதலீட்டாளர் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் அனைவருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது. சீனாவில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதி, பல நாடுகளின் பொருளாதார  வளர்ச்சிக்கு பெரும் இடியாக அமைந்துள்ளது. உலகில் முன்னணியில் உள்ள மிகப்பெரும் பணக்காரர்களில் 500 பேர் மட்டும் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவினால் சுமார் 444 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளனர். அதாவது, 32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு அவர்கள்  பங்கு மதிப்பை இழந்துள்ளனர்.

 கடந்த 2008ம் ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியால் பல நாடுகளின் பொருளாதாரம் சரிவை சந்தித்தது. அதன் பிறகு தப்போது கொரோனா வைரஸ் தாக்குதலால் மிக மோசமான அளவுக்கு பொருளாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓர் ஆண்டில் இந்த 500 கோடீஸ்வர தொழிலதிபர்கள் பங்குச்சந்தையில் தங்களது முதலீடுகளின் மூலம் சுமார் 78 பில்லியன் டாலர் (5 லட்சம் கோடி ரூபாய்) லாபம் சம்பாதித்து இருந்தனர். ஆனால், கடந்த வாரம் பங்குச்சந்தைகளில்  ஏற்பட்ட பெரும் சரிவு இந்த பணத்தை எல்லாம் வாரி சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டது. ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீடு மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.உலகின் 3 முன்னணி பணக்காரர்களான அமேசான் டாட்.காம்., இன்ஸ் ஜெப் பிசோஸ், மைக்ரோசாப்ட் கார்ப் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸ் மற்றும் எல்விஎம்எச் தலைவர் பெர்னால்ட் அர்னால்ட் ஆகிய மூன்று பேர் பெரும்  அளவுக்கு நிதி இழப்பை சந்தித்துள்ளனர். பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் இவர்களது சொத்து மதிப்பு மட்டும் சுமார் 30 பில்லியன் டாலர் (₹2 லட்சம் கோடி)  அளவுக்கு குறைந்துவிட்டது.கொரோனா வைரஸ் தற்போது உலகில் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவைத்தடுக்க உலக சுகாதார நிறுவனம் கடும் முயற்சியில் இறங்கியுள்ளது. இருப்பினும் அதன் தாக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை. இது  சீனாவை மட்டுமல்ல உலகில் பல நாடுகளின் பொருளாதாரத்தையே ஆட்டம் காwண வைத்துள்ளது.

* ெகாரோனா வைரஸ் காரணமாக பல தொழில்கள் முடங்கின; அதனால், பங்குச்சந்தைகளும் மதிப்பை இழந்து சரிந்தன.
* கடந்த 2008ம் ஆண்டில் சர்வதேச அளவில்  ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியால் பல நாடுகளின் பொருளாதாரம் சரிவை  சந்தித்தது.

Tags : Billionaires ,Corona , Corona, stock exchange,32 lakh ,crores
× RELATED இந்தியாவில் முதலீடு: வாரன் பஃபெட் விருப்பம்