×

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 3 யூனிட்கள் பழுது

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதில் 5வது யூனிட் கடந்த 3 மாதமாக இயங்கவில்லை. இந்நிலையில் 1, 3, 4வது யூனிட்களில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பழுது நீக்கும் பணி நடைபெற்று, 4வது யூனிட் மட்டும் சரி செய்யப்பட்டது. மற்ற யூனிட்டுகளில் பழுது நீக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3 யூனிட்கள் இயங்காததால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : units ,Tuticorin Anal Station , Repair ,3 units, Tuticorin Anal Station
× RELATED கோடை வெயிலால் 1.77 லட்சம் யூனிட் சூரிய மின் உற்பத்தி..!!