×

2018ம் ஆண்டு ,254 பேர் பலி நடைபாதை விபத்துகளில் தமிழகம் முதலிடம்: பெருநகரங்களில் சென்னை முன்னிலை

சென்னை:  2018ம் ஆண்டில் நடைபாதை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இதன்படி இந்த ஆண்டு 1,254 பேர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் நடைபாதை விபத்துகளில் அதிகம் பேர் மரணமடைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம்  முதலிடம் பிடித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2018ம் ஆண்டு இந்தியா முழுவதும் 10 ஆயிரத்து 335 பேர் நடை பாதை விபத்துகளில் மரணம் அடைந்துள்ளனர். இதில் தமிழகத்தில் 1,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். 2  இடத்தில் உள்ள மகராஷ்டிராவில் 1,221 பேரும், 3வது இடத்தில் உள்ள மத்திய பிரதேசத்தில் 922 பேரும், 4வது இடத்தில் உள்ள கேரளாவில் 933 பேரும், 5வது இடத்தில் ஹரியானாவில் 686 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதன்படி 2018ம் ஆண்டு சென்னையில் 291 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பெங்களூருவில் 276 பேரும், ஹரியானாவின் பரீதாபாத்தில் 113 பேரும், புனேவின் இந்தூரில்  110 பேரும், மேற்கு வங்களாகத்தன் அன்சோலில் 91 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.



Tags : Tamil Nadu ,road accidents ,Chennai , 2018, 254 , killed, major road, accident, Chennai
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...