×

பென்னாகரத்தில் ரூ6.64 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி பகுதியில் ரூ6 கோடியே 64 லட்சம் மதிப்பிலான பணிகளை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பென்னாகரம் பேரூராட்சியில் முள்ளுவாடி, எட்டியாம்பட்டி, இந்திரா நகர், அருந்ததியர் காலனி, போடூர் காலனி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை, சிமெண்ட் சாலை, கழிவுநீர் வடிகால் அமைத்தல், கல்வெட்டு மற்றும் தடுப்பு சுவர் கட்டுதல் போன்ற அடிப்படை பணிகளுக்கு ஐயூடிபி திட்டத்தின்கீழ் ரூ6 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பணிகளுக்கு ஐந்து இடங்களில் அமைச்சர் அன்பழகன் பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: மக்களின் பொதுவான அடிப்படை பணிகளுக்கு முன்னுரிமை அளித்தல், தனி நபர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுடையோருக்கு உடனடியாக அப்பணிகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வீட்டுமனை இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டு வருகிறது. பென்னாகரம் பேரூராட்சி பகுதியில் புதியதாக விரிவுப்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. என்னுடைய பாலக்கோடு தொகுதியை காட்டிலும் பென்னாகரம் பகுதிக்கு முக்கியத்துவம் அளித்து அடிப்படை பணிகளுக்கு பூமி பூஜை போட்டுள்ளேன். கட்சி பாகுபாடின்றி, தொகுதி பாகுபாடின்றி அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகள் செய்வதில் முன்னுரிமை அளித்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லா கான், தர்மபுரி  மாவட்ட ஆவின் பால் வளத் தலைவர் அன்பழகன், பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அற்புதம் அன்பு, அதிமுக ஒன்றிய செயலாளர் வேலுமணி, ஏரியூர் ஒன்றிய குழுத்தலைவர் பழனிச்சாமி துணைத்தலைவர் தனபாலன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆறுமுகம், ரவி பென்னாகரம் முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணி பேரூராட்சி துணைத் தலைவர் முருகன் மாவட்ட கவுன்சிலர் குட்டி, ஒன்றிய கவுன்சிலர் மதியழகன், பேருராட்சி அலுவலர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலர் கீதா செய்திருந்தார்.

Tags : Pennagaram ,Bhoomi Pooja , Pennagaram, mission, earth pooja
× RELATED ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக...