×

ஜெயலலிதா பிறந்தநாள் வழக்கு தள்ளுபடி

மதுரை: ஜெயலலிதாவின் பிறந்தநாளை, அரசு விழாவாக அறிவிக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த மணிமாறன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைச்சுவாமி, ரவீந்திரன் ஆகியோர், ‘‘மனுதாரர்  பொருத்தமான காரணங்களின்றி வழக்கை தொடர்ந்துள்ளார்’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Jayalalithaa Birthday, Case, Discount
× RELATED உள்நாட்டு விமானத்தில் தங்க கட்டி கொண்டு வரலாமா?: ஐகோர்ட் கேள்வி