×

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்200 பிஎஸ்6

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிடி மற்றும் பிளாடினா பைக் மாடல்களை தொடர்ந்து பஜாஜ் நிறுவனம் மிக விரைவில் சந்தையில் பிரபலமான பல்சர் என்எஸ்200 பைக்கை பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது இப்புதிய பிஎஸ்6 பைக் சில டீலர்ஷிப்களிடம் சென்றடைந்துள்ளது. இப்புதிய என்எஸ்200 பைக்கின் விலை ₹1.24 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது, தற்போதைய மாடலின் விலையைவிட ₹11,000 அதிகம் ஆகும். ஷோரூம்களுக்கு இப்புதிய என்எஸ்200 பைக் சென்றடைய துவக்கியுள்ளதால் இந்த பைக்கிற்கான முன்பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.பிஎஸ்6 தரத்தில் இந்த பைக் ஏற்கனவே கொலம்பியா நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த நாட்டு சந்தையில் என்எஸ்200 மாடலின் பிஎஸ்6 இன்ஜின் 24.5 பிஎச்பி பவரையும், 18.6 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்துகிறது. இந்த ஆற்றல் அளவு, இந்திய வெர்சன் பைக்கில் 23.5 பிஎச்பி/18.3 என்எம் டார்க் திறன் என குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், கொலம்பியா வெர்சன் பைக்கைவிட இந்திய வெர்சன் என்எஸ்200 பிஎஸ்6 பைக்கில் மிகவும் அப்டேட்டான எக்ஸாஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் தவிர, வேறு எந்த மாற்றமும் இந்த பிஎஸ்6 பைக்கில் கொண்டுவரப்படவில்லை.

தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் என்எஸ்200 மாடலில் உள்ள டெலிஸ்கோப் போர்க்ஸை கொண்ட அதே ட்வின்-ஸ்பார் சுற்றளவு கொண்ட ப்ரேம் மற்றும் எரிவாயுவால் செயல்படுகின்ற மோனோஷாக் அமைப்புதான் இந்த பிஎஸ்6 மாடலுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், இரு சக்கரங்களிலும் ட்வின்-டிஸ்க் ப்ரேக் மற்றும் நிலையாக பொருத்தப்பட்டுள்ள சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது. இந்த பைக், பிப்ரவரி மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Bajaj Pulsar , New Bajaj Pulsar ,NS200 PS6
× RELATED 100 நகரங்களில் கொண்டாட்டம்; பஜாஜ் பல்சர்...