×

சில்லரை விற்பனை செய்தால் மொத்த வியாபாரிகளின் கடை உரிமம் ரத்து

அண்ணாநகர்: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள் சில்லரை விற்பனை செய்தால் அபராதம் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித் துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட் காய்கறி சில்லரை வியாபாரிகள் சங்கத்தினர், கோயம்பேடு அங்காடி நிர்வாகக்குழு முதன்மை அதிகாரியிடம் நேற்று முன்தினம் மனு ஒன்றை அளித்தனர். அதில், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள் சிலர், சில்லரை வியாபாரம் செய்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், நிர்வாக குழு முதன்மை அதிகாரி கோவிந்தராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.

இதில், கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள் யாரும் சில்லரை வியாபாரம் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு மொத்த வியாபாரிகள் சம்மதம் தெரிவித்தனர். இதுகுறித்து வரும் திங்கட்கிழமை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆய்வு  நடத்தப்படும் என்றும், அவ்வாறு மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு அபதாரம் மற்றும் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று நிர்வாக குழு முதன்மை அதிகாரி எச்சரித்தார்.


Tags : Shop retailers , Retail, Wholesalers, Shop License Revocation
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...