×

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

பெரம்பூர்: வில்லிவாக்கம், ரெட்டி தெருவை சேர்ந்தவர் அன்னலட்சுமி (77). இவர், 2 நாட்களுக்கு முன், வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் அயனாவரம் புறப்பட்டார். அந்த ஆட்டோவில் ஏற்கனவே 4 பெண்கள் இருந்தனர். அதில் ஒரு பெண், ‘உங்களது செயின் அறுந்துள்ளது. எனவே, அதை கற்றி பர்சில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளனர்.  அதை நம்பிய அன்னலட்சுமி, தான் அணிந்திருந்த 5 பவுன் செயினை கழற்றி பையில் வைத்துக்கொண்டார்.பின்னர், அயனாவரம் வந்ததும் ஆட்டோவில் இருந்து இறங்கி சென்றுவிட்டார். வீட்டுக்கு வந்ததும் பையை திறந்து பார்த்தபோது செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சியுடைந்தார். ஆட்டோவில் வந்த பெண்கள், நூதனமாக பேசி செயினை பறித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அயனாவரம் போலீசில் அன்னலட்சுமி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகள் மூலம் பெண்களை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்:  பெரம்பூர் கோபால் ரெட்டி காலனியை சேர்ந்தவர்  ஷீலா மெக்பெர்லீன்  (63).   இவர் நேற்று பெரம்பூர் ரங்கசாமி தெரு வழியாக தனது கணவருடன் பைக்கில் சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த  மர்ம நபர், ஷீலா மெக்பெர்லீன் அணிந்திருந்த 2 சவரன் செயினை அறுத்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து ஷீலா மெக்பெர்லீன்  செம்பியம் குற்றப்பிரிவில்  புகார் செய்தார். போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Chain ,grandfather , godmother, Chain, flush
× RELATED பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக...