தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகாரை விசாரிக்க ஐகோர்ட் இடைக்காலத் தடை

சென்னை: தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகாரை விசாரிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் ஆபாசமாக பேசியதாக நடிகை அமலாபால் போலீசில் புகார் கொடுத்தார். அமலாபால் புகாரை ஏற்று அழகேசன், பாஸ்கரன் ஆகியோரை சென்னை போலீஸ் கைது செய்தது. ஜாமீனில் விடுதலையான இருவரும் நடிகை அமலாபால் பொய் புகார் கூறியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு தடை விதிக்குமாறும் பாஸ்கர் என்பவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Related Stories: