×

குரூப் 4 தேர்வில் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 27 பேர் மட்டும் சான்றிதழ் பதிவேற்றம் செய்தால் போதும்: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

சென்னை: குரூப் 4ல் தேர்வு செய்யப்பட்ட 27 பேர் இ-சேவை மையங்கள் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் செய்தால் போதும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வுக்கு தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட தங்களது சான்றிதழ் நகல்களை பிப்.13 முதல் பிப்.18ம் தேதிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் அரசு இ சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தது.

இந்த செய்தி சில தேர்வர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, ஏற்கனவே இத்தேர்வுக்கான தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களும் மீண்டும் சான்றிதழ்களை இ சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.ஏற்கனவே கடந்த டிசம்பர் 5ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்த தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் தகுதியான தேர்வர்கள் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பிப்.12ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் யாரும் தங்களது சான்றிதழை மீண்டும் இ சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய தேவையில்லை.

அவர்கள் கலந்தாய்வுக்கு வரும் போது தங்களது மூலச் சான்றிதழ்களை கொண்டு வந்தால் போதுமானதாகும்.தற்போது கூடுதலாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 27 தேர்வர்கள் மட்டும் தங்களது சான்றிதழ்களின் நகல்களை இ சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்தால் போதுமானது.

Tags : Group 4 , Certificate, DNBSC
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் குரூப் 4 போட்டி தேர்விற்கான மாதிரி தேர்வு