×

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் இடைத்தரகர் ஜெயக்குமாரின் நண்பர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் இடைத்தரகர் ஜெயக்குமாரின் நண்பர் செல்வேந்திரன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். திருச்சி துறையூரை சேர்ந்த ஆசிரியர் செல்வேந்திரன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். செல்வேந்திரன் மூவானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை படடதாரி ஆசிரியராக உள்ளார். குரூப்-4 முறைகேடு வழக்கு தொடர்பாக பிரபாகர் என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பிரபாகரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 7 நாள் போலீஸ் காவல் முடிந்து எழும்பூர் நீதிமன்றத்தில் இடைத்தரகர் ஜெயக்குமார் ஆஜர்ப்படுத்தப்பட்டார். 7 நாள் போலீஸ் காவலில் போது முறைகேடு நடைபெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி விசாரணை நடத்தியது. அப்போது தேர்வில் முறைகேடுகளை செய்ததாக ஜெயக்குமார் ஒப்புதல் அளித்தார். அத்துடன் அவரிடம் இருந்து 4 கார்கள் மற்றும் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Charan ,court ,Jayakumar , tnpsc
× RELATED ஆட்டோ டிரைவர் கொலை சங்கரன்கோவில் கோர்ட்டில் இருவர் சரண்