×

பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க ரூ.302.98 கோடி ஒதுக்கீடு

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது  அவர் உரையில் கூறிய சிறப்பு அறிவிப்புகள் குறிப்புகளாக பின்வருமாறு...

*ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு ரூ.4,109.53 கோடி ஒதுக்கீடு

*ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கான நிதியில் கல்வித் திட்டங்களுக்காக ரூ.2,018.24 கோடி ஒதுக்கீடு

*உயர்கல்வி ஊக்கத் தொகை திட்டத்திற்கு ரூ.1949.58 கோடி ஒதுக்கீடு

*நபார்டு வங்கியின் உதவியுடன், ரூ.106.29 கோடி செலவில் 23 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

*ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

*அனைத்து பழங்குடியினர் குடியிருப்புகளிலும், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த ஒரு சிறப்புத் திட்டம்

*சிறப்புத் திட்டத்தின் கீழ் ரூ.660 கோடியில் விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது

*பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் நலனுக்காக ரூ.1034.02 கோடி ஒதுக்கீடு

*பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க ரூ.302.98 கோடி ஒதுக்கீடு

Tags : Siramaraparinar ,MPC ,PCI ,Minorities ,empici , Budget, Finance Minister, O Paneer Wealth, filed
× RELATED எம்.பி.சி.யில் வன்னியர்களுக்கான 10.5%...