×

பர்னிச்சர் கடையில் தீ

பெரம்பூர்: கொடுங்கையூர் அருகே எருக்கஞ்சேரி ஜிஎன்டி சாலையில், அதே பகுதியை சேர்ந்த குஷால் என்பவருக்கு சொந்தமான மரப்பலகைகள் மற்றும் மர நாற்காலிகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இக்கடையில் இருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென கரும்புகை வெளியேறியது. தகவலறிந்து வந்த வியாசர்பாடி தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி தீயைஅணைத்தனர். ஆனால், அதற்குள் மர பொருட்கள் எரிந்து நாசமானது.

Tags : furniture store , Fire , furniture store
× RELATED பர்னிச்சர் கடை மேலாளர் மீது மோசடி வழக்கு