×

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 9 பேர் நிரந்தரம்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 9 நீதிபதிகளை நிரந்தரம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பி.டி.ஆஷா, என்.நிர்மல்குமார், சுப்பிரமணியம் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர். கடந்த 2018 ஜூன் மாதம் 7 பேரும், 2018 நவம்பர் மாதம் ஒரு நீதிபதியும், 2019 பிப்ரவரியில் ஒரு நீதிபதியும் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவர்கள் 9 பேரையும் நிரந்தரம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான கொலீஜியம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 75 ஆகும். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் 55 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 20 பதவி இடங்கள் காலியாக உள்ளன. வழக்குகளின் தேக்கம் அதிகமாக இருப்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளின் இடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Madras, Supreme Court, 9, Permanent, Supreme Court, Collegium
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...