×

பெரம்பலூரில் டிராபிக் இன்ஸ்பெக்டர் மாமூல் வசூல்: வைரலாகும் வீடியோ

பெரம்பலூர்: பெரம்பலூரில் மாமூல் வசூலிக்கும் டிராபிக் இன்ஸ்பெக்டரின் வீடியோ வைரலாவதால் பரவுகிறது. பெரம்பலூர் டவுன் டிராபிக் இன்ஸ்பெக்டர் சௌந்தர்ராஜன். இவரிடம், பல லாரி டிரைவர்கள்  மாமூல் பணத்தை கொடுப்பதுவும், அவர் கராராக வசூலிப்பது போல் பிகு பண்ணுவதும் அடங் கிய வீடியோ பதிவு ஒன்று தமிழகமெங்கும் வைரலாக பரவி காவல்து றையின் மானத்தை வாங்குகிறது. அதில் நடந் த உரையாடல் பின்வருமாறு:
இன்ஸ் : என்ன லோடு இது
டிரைவர் : வேஸ்ட் குட்ஸ் சார்
இன்ஸ் : எவ்வளவு எடை இருக்கும்.வே பிரிட்ஜ் பில் இருக்கா ?
டிரைவர் : சார் இந்தாங்க சார் பணத்தை வச்சிக்கோங்க சார்.
இன்ஸ் :  லைசன்ஸக் கொ டுப்பா கேஸ் போட்டுக்க லாம் எனக்கூறியதும் இன் ஸ்பெக்டர் எதிர்பார்த்த பணத்தை அந்த டிரைவர் கொடுத்துவிட்டுச் செல்கிறார். அதனை இன்ஸ்பெ க்டர் வாங்கிஎண்ணி சரி பார்த்து வைத்துக்கொள்கிறார். இப்படி லாரி டிரைவர்கள், இன்ஸ்பெக்டர் இடையேயான உரையாடல்கள் அந்த வீடியோவில் தொடர்கிறது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


Tags : Mamool ,Tropic Inspector ,Perambalur , Video of Perambalur, Tropic Inspector, Mamul Collection, Viral
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி