×

15 நாட்களுக்கு பாஸ்டேக் இலவசம்

புதுடெல்லி: சுங்கச்சாவடிகளில் கடந்த டிசம்பர் 15 முதல் நாடு முழுவதும் 527 சுங்கச்சாவடிகளில் இது நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும், பாஸ்டேக் பயன்படுத்தாத வாகனங்களுக்கு 2 மடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய  அரசு எச்சரித்திருந்தது. சுங்கச்சாவடிகளில் 75 சதவீத பாதைகள் பாஸ்டேக் முறைக்கு மாற்றப்பட்டு விட்டன. 25 சதவீத பாதைகள் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில சுங்கச்சாவடிகளில்  பாஸ்டேக் முறைக்கு மக்கள் மாறவில்லை. இதை தொடர்ந்து, இந்த பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘டிஜிட்டல் முறையில் சுங்கச்சாவடி  கட்டணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், வரும் 15ம் தேதி முதல் 29ம் தேதி வரை பாஸ்டாக் கட்டணம் 100 தள்ளுபடி செய்யப்படுகிறது. எனவே, வாகனம் வைத்திருப்போர் ஆர்சி புத்தகத்தை காண்பித்து, அந்த வாகனத்துக்கான  பாஸ்டேக்கை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்’’ என அறிவித்துள்ளது.


Tags : fastag ,Free Tolls
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...