சென்னை: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ குமரகுரு. இவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் உள்ளார். இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பிப்ரவரி 10ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு அதற்கேற்ப சிகிச்சை பெறுமாறு கேட்டுக்கொண்டனர். அதனால் அன்று முதல் அவர் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் எம்எல்ஏ குமரகுருவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிற்பகல் 2 மணியளவில் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.