×

கடத்தூர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

கடத்தூர்: கடத்தூர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கிருந்து தர்மபுரி- ஈரோடு, சிந்தல்பாடி, புட்டிரெட்டிப்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.இந்நிலையில் இந்த சாலையோரங்களில் அமைந்துள்ள கடைகளுக்கு வருபவர்கள், தங்களது வாகனங்களை சாலையோரங்களிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

மேலும் தள்ளுவண்டி கடைகளும் போடப்பட்டுள்ளது. இதனால் சாலை குறுகிய நிலையில் உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறுகிய சாலையால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கடைகளின் முன்பு வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க, போக்குவரத்து ேபாலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Kadathur , Cuddalore, roadside occupation, traffic congestion
× RELATED கடத்தூர் பகுதியில் தண்ணீரை விலைக்கு...