×

காணாமல் போன ஸ்கை ரெசார்ட்

நன்றி குங்குமம் முத்தாரம்

ஒரு காலத்தில் பொலிவியாவின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக இருந்தது சகால்டாயா பனிமலை. தென் அமெரிக்காவில் உள்ள உயரமான மலைகளில் ஒன்று இது. 18 ஆயிரம் வருடங்களுக்கு முன் உருவான இந்த மலையின் உயரம் 5,241 மீட்டர்.  லட்சக்கணக்கில் மக்கள் வந்து சென்றனர். உலகிலேயே உயரமான இடத்தில் இருந்த ஸ்கை ரெசார்ட் கூட இங்குதான் இருந்தது.

1980-ம் வருடத்தில் மெல்ல மெல்ல உருக ஆரம்பித்த இம்மலை 2009-இல் முற்றிலும் காணாமல் போய்விட்டது. உலக வெப்பமயமாதல் தான் மலை உருக முக்கிய காரணம். கடந்த முப்பது வருடங்களில் சகால்டாயா மாதிரி நூற்றுக்கணக்கான அழகிய இடங்கள் மனித செயல்பாட்டினாலும், கால நிலை மாற்றத்தாலும் காணாமல் போயிருக்கின்றன.


Tags : Ski Resort , Missing Ski Resort
× RELATED சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்...