×

ஆஸ்கர் விருது இன்று இரவு அறிவிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுகள் இன்று இரவு நடக்கும் விழாவில் அறிவிக்கப்படுகிறது. 11 ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும்  ஜோக்கர் படம் எத்தனை விருதுகள் பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.உலக அளவில் புகழ் பெற்ற  ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று இரவு அமெரிக் காவில் நடக்கிறது. இதில் ஜோக்கர் என்ற படம் 11 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக் கப்பட்டிருக்கிறது. சிறந்த நடிகர், சிறந்த இயக்கம், எடிட்டிங் உள்ளிட்ட 11 பிரிவுகளுக்கு இப்படம்  போட்டியில் உள்ளது. 1917 மற்றும் ஒன்ஸ் அப்பான் ஏ டைம்  தலா 10 பிரிவுகளில் போட்டியில் உள்ளது.

மேலும் ஜோ ஜோ ராப்பிட் மற்றும் லிட்டில் உமன் தலா 6 விருதுகளுக்கும், மேரேஜ் ஸ்டோரி போர்ட் வி பெராரி மற்றும் பராசைட் படங்கள் சிறந்த பட பிரிவுக்கும் போட்டியில் உள்ளது.சிறந்த நடிகர் போட்டியில் அன்டோனியோ பான்டெராஸ்  (பெயின் அண்ட் குளோரி), லியோனார்டோ டி காப்ரியோ (ஒன்ஸ் அப்பான் ஏ டைம்), ஆடம் டிரிவெரி (மேரேஜ் ஸ்டோரி),  ஜோகுயின் போனிக்ஸ் (ஜோக்கர்), ஜெனாதன் பிரேசே ( தி டு போப்ஸ்) ஆகியோரும், அதேபோல் சிறந்த நடிகை  போட்டியில் சிந்தியா எரிவோ, ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஸோய்ரிசெ ரோனன், சார்லிஸ் தெஹரன், ரெனே ஸ்வெக்கர் என 5 நடிகைகள் போட்டியில் உள்ளனர். இதுதவிர பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. விழாவில்  பங்கேற்க ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் அரங்கில் குவிந்து வருகின்றனர்.


Tags : Oscar , Oscar nomination tonight
× RELATED மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்துக்கு ஆஸ்கர் விருது