×

ரெனால்ட் க்விட் பிஎஸ்6 2.92 லட்சத்தில் அறிமுகம்

ரெனால்ட் நிறுவனம், க்விட் ஹேட்ச்பேக் ரக மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இப்புதிய காரின் ஆரம்ப விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் 2.92 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பிஎஸ்4 க்விட் மாடலின் எஸ்டிடி, ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் க்ளிம்பர் என்ற அதே ஐந்து வேரியண்ட்களில் இப்புதிய பிஎஸ்6 மாடலும் விற்பனை செய்யப்பட உள்ளது. பிஎஸ்6 அப்டேட்டால் இந்த கார் பிஎஸ்4 மாடலைவிட 9,000 விலையை அதிகமாக பெற்றுள்ளது. பிஎஸ்6 அப்டேட் தவிர்த்து, இப்புதிய மாடலில் வேறெந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. இன்ஜின் வெளியிடும் ஆற்றல் அளவு உள்பட அனைத்தும் அப்படியேதான் இந்த பிஎஸ்6 மாடலில் தொடர்ந்துள்ளது. இரு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளை கொண்டுள்ள இந்த காரின் எண்ட்ரீ-லெவல் 0.8 லிட்டர் 799 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 54 பிஎச்பி பவர் மற்றும் 72 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. மற்றொரு பெரிய 1.0 லிட்டர் இன்ஜின் 68 பிஎச்பி பவர்/ 91 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்குகிறது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக இந்த காரில் இரு இன்ஜின்களுடனும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது.

14 அங்குல சக்கரங்கள் க்விட் ஹேட்ச்பேக் ரக மாடலில் வழங்கப்படுகிறது. மேலே காட்டப்பட்டுள்ள விலை அட்டவணையின்படி, புதிய பிஎஸ்6 க்விட் மாடல் 2.92 லட்சத்தை ஆரம்ப விலையாக கொண்டுள்ளது. இந்த மாடலின் விலையுயர்ந்த வேரியண்ட்டான க்ளிம்பர் (ஒ) ஏடி 5.01 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட உள்ளது. க்விட் வரிசையில் கடைசியாக ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து க்விட் பேஸ்லிப்ட் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த பேஸ்லிப்ட் 3.25 லட்சம் ஆரம்ப விலையுடன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற முன்னணி இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களை போன்று ரெனால்ட் நிறுவனமும் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்த துவங்கியுள்ளது. தற்போது வெளிவந்துள்ள இந்த க்விட் பிஎஸ்6 மாடலுக்கு போட்டியாக சந்தையில் மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ, மாருதி ஆல்டோ கே10 மற்றும் டட்சன் ரெடிகோ போன்ற கார்கள் உள்ளன.

Tags : Introduction ,Renault , Renault Quit PS6, 2.92 lakhs
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...