×

ஹீரோ நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 ஸ்கூட்டர் அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதல் பிஎஸ்6 ஸ்கூட்டராக பிளஷர் ப்ளஸ் 110 எப்ஐ மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய பிஎஸ்6-க்கு இணக்கமான ஸ்கூட்டரின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் 54,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ள பிளஷர் ப்ளஸ் 110 எப்ஐ பிஎஸ்6 ஸ்கூட்டரின் இந்த விலை,் ஸ்டீல் வீல் வேரியண்ட்டிற்கு மட்டும்தான். மற்றொரு அலாய் வீல் வேரியண்ட் 56,800 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு வேரியண்ட்களும் தங்களது பிஎஸ்4 வெர்சனில் இருந்து 6,300 வரை விலை அதிகரிப்பை பெற்றுள்ளன. பிஎஸ்6 மாற்றத்தால் எரிபொருள் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டரின் இன்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. இதேபோல் 8 சென்சார்களை கொண்ட புரோகிராம் எப்ஐ உடன் உள்ள அட்வான்ஸ் எக்ஸ்சென்ஸ் தொழிற்நுட்பம் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளதால் அக்ஸலரேஷனும் முன்பைவிட 10 சதவீதம் வேகமாக இருக்கும். ஒட்டுமொத்தமாக பார்க்கும் இப்புதிய பிஎஸ்6 ஸ்கூட்டரின் அலாய் வீல் வேரியண்ட், க்ரோம்-ஆல் சூழப்பட்ட ஹெட்லைட் அமைப்பையும், புதிய டிசைனில் பக்கவாட்டு பேனல்கள் மற்றும் க்ரோம்-அவுட் 3டி லோகோவையும் பெற்றுள்ளது. இப்புதிய பிஎஸ்6 ஸ்கூட்டர் முன்புறத்தில் டிரைலிங் லிங்க் சஸ்பென்ஷன், பின்புறத்தில் சிங்கிள் ஷாக் அப்சார்பர் உள்ளது. பிரேக்கிங்கிற்காக இரு சக்கரங்களிலும் சிபிஎஸ் உடன் நிலையாக 130 மி.மீ. டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

‘’ஸ்பிளெண்டர் ஐ-ஸ்மார்ட், ஹெச்.எப் டீலக்ஸ் பிஎஸ்6 பைக்குகளை தொடர்ந்து, பிஎஸ்6-க்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்ட வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் பணியில் ஹீரோ நிறுவனம் தன்னை தீவிரப்படுத்தியுள்ளது. ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் எப்போதும் ஒரு நல்ல மதிப்பு உண்டு. இதனை மனதில் வைத்துத்தான் இப்புதிய பிஎஸ்6 பிளஷர் ப்ளஸ் 110 எப்ஐ ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிஎஸ்6 ஸ்கூட்டர் தற்போதைய இளம் தலைமுறையினர் இடையே நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறோம்’’’’ என ஹீரோ அறிவித்துள்ளது.
ஹீரோ நிறுவனத்தின் ஜெய்பூர் தொழிற்சாலையில் இப்புதிய பிஎஸ்6 பைக்கிற்கான டிசைன் மற்றும் ஸ்டைலிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய பிஎஸ்6 ஸ்கூட்டரில் ஹேண்டிலிங் மிக சிறப்பாக இருக்கும் என நம்பலாம். இந்திய சந்தையில், ஹோண்டா ஆக்டிவா 6ஜி மற்றும் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 போன்ற பிரபலமான ஸ்கூட்டர்களுடன், பிளஷர் ப்ளஸ் 110 எப்ஐ மாடல் போட்டியிடும்.


Tags : company ,Hero , Hero launches company's, first PS6 scooter
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...