×

வீடு லீசுக்கு விடுவதாக கூறி 15 லட்சம் ஏமாற்றியவர் கைது

சென்னை: வேளச்சேரி காந்தி நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா (45). இவர், தனது வீட்டை லீசுக்கு விடுவதாக தெரிவித்திருந்தார். இதையறிந்த   மதன், ராமச்சந்திரன், பாலகிருஷ்ணன், குமரேசன் ஆகியோர் வீடு லீசுக்கு விடுமாறு கேட்டுள்ளனர். அப்போது ஜோஸ்வா ₹15 லட்சம்   வாங்கி கொண்டு ஒப்பந்தம் போட்டுள்ளார். ஆனால், அதன்படி     வீடு கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்த புகாரின்போரில், ஜோஸ்வாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.„ தண்டையார்பேட்டையை சேர்ந்த சசிதரன் (36) என்பவர் நேற்று முன்தினம் இரவு கொளத்தூர் அடுத்த ராஜமங்கலம் 200 அடி சாலையில் பைக்கில் சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தில் பைக் மோதியதில் படுகாயமடைந்து இறந்தார். „ சோழிங்கநல்லூர் காந்தி நகர் துர்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரின் மகள் சுகன்யா (19), நேற்று முன்தினம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.„ அடிதடி, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த, நெற்குன்றம் பகுதியை சேர்ந்த அரிகரன் (24) என்பவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

„ அயனாவரம் பட்டாச்சாரியா தெருவை சேர்ந்த கஸ்தூரி (60), உடல்நல குறைவு காரணமாக மன உளைச்சலில் நேற்று வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். „ ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் உள்ள ஒரு வீட்டில் பணம் மற்றும் நகை வைத்து சூதாடிய ஓட்டேரியை சேர்ந்த ரதி (30), ஜீனத் (55), வசந்தி (48), தண்டையார்பேட்டையை சேர்ந்த ரித்திகா (35), புரசைவாக்கத்தை சேர்ந்த பெரியநாயகி (50), ஆர்.கே. புரத்தை சேர்ந்த இந்துமதி (51), ரேணுகா (34) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ₹20 ஆயிரம், 3 தங்க கம்மலை பறிமுதல் செய்தனர். „ புளியந்தோப்பு காந்திஜி நகர் 9வது தெருவை சேர்ந்த கல்லூரி மாணவன் சக்திவேல் (20), நேற்று முன்தினம் செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் பைக்கில் சென்றபோது, மாநகர பஸ் மோதி இறந்தார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மாநகர பஸ் டிரைவர் பண்ருட்டியை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவரை கைது செய்தனர்.

„ மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் ஜோனத்தான் பாமோயி (25). சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்த இவர், ஒருதலை காதலால் மனமுடைந்து, தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
„நம்மாழ்வார்பேட்டை ஒத்தவாடை தெருவில் உள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற டெல்லி (61) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 14 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.




Tags : fraudster ,house Leasing house , 15 lakh ,fraudster, arrested ,leasing house
× RELATED நிலம் வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் மோசடி செய்தவர் கைது