×

நிலம் வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் மோசடி செய்தவர் கைது

பெரம்பூர்: சென்னை எம்கேபி நகர், 18வது மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் காந்திராஜ் (58). இவர் கடந்த 2019ம் ஆண்டு நிலம் வாங்க முடிவு செய்து,  அயப்பாக்கம் அம்பிகை நகரை சேர்ந்த அமிர்தராஜ் (38) என்பவரை அணுகினார். அப்போது, அயப்பாக்கம் பகுதியில் நிலங்கள் குறைந்த விலையில் வாங்கி தருவதாக காந்திராஜிடம் இருந்து 10 லட்சத்தை வாங்கி உள்ளார்.  ஆனால், ஒரு வருடம் ஆகியும் இதுவரை எந்த இடத்தையும் அவர் வாங்கி தரவில்லை. இதனால், காந்திராஜ் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வந்தார். ஆனால், பணத்தை திருப்பி தராமல், அமிர்தராஜ் ஏமாற்றி வந்துள்ளார். இதுபற்றி காந்திராஜ் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணையில், காந்திராஜிடம் இருந்து 10 லட்சத்தை பெற்று ஏமாற்றியதை அமிர்தராஜ் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அமிர்தராஜை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அமிர்தராஜின்  நண்பர் ரமேஷ்  என்பவரை  தேடி வருகின்றனர்.

Tags : fraudster ,land , Land, lakhs fraud, arrest
× RELATED தெலுங்கானாவில் நிலப் பிரச்சனை...