×

கார்பெட் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு: 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

சித்தாபூர்: உத்தர பிரதேசத்தில் கார்பெட் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.   உத்தபிரதேச மாநிலம், பிஸ்வான் அருகேுள்ள ஜலால்பூர் கிராமத்தில் கார்பெட் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் உள்ளூர் போலீசாருடன் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். அங்கு இறந்து கிடந்த 7 உடல்களை அவர்கள் மீட்டனர். விசாரணையில்  விஷவாயு தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், மேலும் 2 பேர் என 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது. உயிரிழந்த அனைவரும் கான்பூரை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் அதிக் (45), அவரது மனைவி சாய்ரா(42), அவர்களது குழந்தைகள் ஆயிஷா(12), அப்ரோஷ்(8), பைசல் (2) மற்றும் மோட்டு (75), பஹல்வான் (70) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தொடர்ந்து விஷவாயு கசிந்ததால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் சில நாய்களும் இறந்து கிடந்தது. கார்பெட் தொழிற்சாைலயில் இருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதா அல்லது அருகேயுள்ள ரசாயன ஆலையில் இருந்து ரசாயனம் கசிந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Tags : Gas leakage ,factory ,children , Carpet factory, gas leak, 3 children, 7 killed
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...