×

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி

புதுடெல்லி: வயிற்றுவலிக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று வீடு திரும்பினார்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வயிற்று வலி மற்றும் மூச்சு திணறல் காரணமாக கடந்த 2ம் தேதி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவரது வயிற்றில் நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் அவரது உடல்நிலை தேறியதை தொடர்ந்து, நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சில நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : Sonia Gandhi ,home ,hospital , Sonia Gandhi ,returns home , hospital
× RELATED சொல்லிட்டாங்க...