×

மின் ஊழியர் மீது சரமாரி தாக்குதல் அதிமுக பிரமுகரை கண்டித்து தொழிலாளர்கள் திடீர் மறியல்: கைது செய்ய கோரிக்கை

சென்னை: மின் ஊழியரை தாக்கிய அதிமுக பிரமுகரை கைது செய்ய கோரி, சிஐடியு உள்பட தொழிற்சங்கத்தினர் சைதாப்பேட்டையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு பெரும் ஏற்பட்டது. சென்னை, சைதாப்பேட்டை சிஐடி நகர் 2வது பிரிவில்,  மின் ஊழியர்  தட்சிணாமூர்த்தி எல்.டி கேபிள் பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது பணி செய்கிற பகுதியில் மின் நுகர்வோர்களிடம் பணம் வாங்கி கொடுக்கவில்லை என்ற  காரணத்தை கூறி தட்சிணாமூர்த்தியை அதிமுக பிரமுகர் ஒருவர் தாக்கிதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அதிமுக பிரமுகரை கைது செய்ய கோரியும், மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க  வலியுறுத்தியும் நேற்று சிஐடி நகர் 2வது பிரிவில் உள்ள அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆத்திரமடைந்த ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தனர். உரிய  நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில், மின் ஊழியர் மத்திய அமைப்பு  (சிஐடியு ) உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர்.

Tags : Volleyball attack ,power worker ,strike ,AIADMK , Electrical worker, AIADMK, workers, picket, arrest
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து